பாரதி
- Dhamodharan Lakshmanan

- Dec 23, 2021
- 1 min read
பறையடித்த உணர்வினை
பெயருரைத்த பொழுதிலே
அறம் எழுந்து நடந்திட
கரம் கொடுத்த கவிஞரே
தலை நிமிர்ந்து தவறினை
களையருக்க தமிழினை
பதம்படுத்தி படைத்தவோர்
அறம் கலந்த வீறினை
கடல் கடந்த கரையிலும்
தமிழ் ழகரத்தை எழுதிடும்
அமீரகத்து விதை, எமைதனை..
வீழ்வோமென்று நினைத்தாயோ....



Comments