இயமத்தில் நிற்பவர்களின் குணங்கள்
- Dhamodharan Lakshmanan

- Jan 24, 2021
- 1 min read
Updated: Aug 13, 2021
கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே.
இயமம் என்பது தீயவற்றைச் செய்யாமல் விடுதல் ஆகும். இயமத்தை மேற்கொள்பவர் ஓர் உயிரையும் கொல்ல மாட்டார், பொய் சொல்ல மாட்டார், திருட மாட்டார், பிறரை மதிக்கும் நல்ல குணம், உள்ளவர், நல்லவர், அடக்கமுடையவர், நடுவு நிலையில் நிற்க வல்லவர் ஆவர். தன் பொருளை பிறர்க்கு பகிர்ந்து தரும் இயல்புடையவர் ஆவர்



Comments